ஐஐடி மாணவர்களின் மாமிச உணவும் மத்திய அரசும்

Nov 02, 2014, 03:34 PM

Subscribe

சமீபத்தில் இந்திய மத்திய அரசின் ஆளும் கட்சியான பாஜகவின் தாய் அமைப்பாக பார்க்கப்படும் ஆர் எஸ் எஸ் அமைப்பின் மத்திய பிரதேச பிரிவு, மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தது.

அந்த கடிதத்தில் இந்தியாவின் ஐஐடி என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தொழில்நுட்பக்கல்லூரிகளில் மாமிச உணவுக்கு மாற்றாக மரக்கறி உணவை ஊக்குவிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

ஐஐடி கல்லூரிகளில் அசைவ உணவு பரிமாறப்படுவதன் மூலம் மாணவர்களிடையே மோசமான மேற்கத்திய கலாச்சாரம் பரப்பப்படுவதாக கூறி எஸ்.எஸ்.கே ஜெயின் என்பவரால் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு அனுப்பப்பட்டுள்ள இந்தக் கடிதம், அந்த அமைச்சகத்தின் சார்பில் ஐஐடி கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பக்வத் கடந்த மாதம் நாக்பூரில் நடைபெற்ற விஜயதஸமி விழாவில் ஆற்றிய உரை இந்திய அரசால் நடத்தப்படும் தொலைக்காட்சியான தூர்தர்ஷ்னால் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது சர்ச்சை ஏற்படுத்திய பின்னணியில் பாஜக தலைமையிலான தற்போதய மத்திய அரசு ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு அதிகம் முக்கியத்துவம் அளிப்பதாகவும், ஆர் எஸ் எஸின் கொள்கைகளை அரசு மூலம் நிறைவேற்ற முயல்வதாகவும் எதிர்கட்சி அரசியல்தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.

இதன் பின்னணி குறித்து ஆராயும் பெட்டகம். தயாரித்து வழங்குகிறார் சங்கீதா ராஜன்.