நவம்பர் 2, 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (2-10-2014) பிபிசி தமிழோசையில்
வெப்பவாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த உலக அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால், ஈடு செய்ய முடியாத பாதிப்புக்களை உலகம் சந்திக்க நேரும் என்று ஐநா மன்றத்தின் பருவநிலை மாற்றம் தொடர்பான நிபுணர் குழு எச்சரித்திருப்பது குறித்த செய்தி;
இலங்கை மலையக மண்சரிவில் இன்று மேலும் ஒரு சடலம் மீட்கப்பட்டிருப்பது குறித்த தகவல்கள்;
பாதிக்கப்பட்ட பகுதிக்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் குழு ஒன்று இன்று சென்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்திருப்பது பற்றி அந்த குழுவில் இருந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனின் செவ்வி;
போதை மருந்து கடத்திய குற்றச்சாட்டின் பேரில் 5 தமிழக மீனவர்களுக்கு இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு எழுந்திருக்கும் பின்னணியில் அதே வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை வடக்கைச் சேர்ந்த மூன்று தமிழ் மீனவர்களின் குடும்பங்கள் இதில் தமக்கு உதவுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் மகஜர் ஒன்றை இன்று அளித்திருப்பது குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிபிசி தமிழோசைக்கு அளித்த பிரத்யேக செவ்வி;
பெங்களூரில் வாழும் திருமணமான 32 வயது ஆண் ஒருவர் மற்ற ஆண்களுடன் ஒருபாலுறவு வைத்திருந்தார் என்று அவரது மனைவி புகார் அளித்ததை தொடர்ந்து அவர் சமீபத்தில் கைது செய்யப்பட்ட பின்னணியில், ஒருபாலுறவுக்காரர்களின் நிர்பந்தத் திருமண வாழ்க்கையில் எழும் உளவியல் பிரச்சினைகள் குறித்து மனநல மருத்துவர் ருத்ரனின் செவ்வி;
இந்தியாவின் ஐ ஐ டிக்களில் மாமிச உணவை தடை செய்யக்கோரும் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவரின் கோரிக்கை ஏற்படுத்தியிருக்கும் சர்ச்சை தொடர்பான பெட்டகம் ஆகியவற்றை கேட்கலாம்.
