நவம்பர் 3, 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Nov 03, 2014, 04:56 PM

Subscribe

இன்றைய (03-11-2014) பிபிசி தமிழோசையில்

தமிழக காங்கிரஸ் கட்சியில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் ஜி கே வாசன் பிரிந்து சென்று தனிக்கட்சி உருவாக்கப்போவதாக அறிவித்திருப்பது குறித்த செய்தி;

இவரது பிளவு காங்கிரஸ் கட்சியிலும் தமிழக அரசியலிலும் என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்த ஒரு அலசல்;

திமுக அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்திருப்பது குறித்த செய்தி;

இந்திய தலைநகர் தில்லியின் பாவனா பகுதியில் ஒரு மதக் கலவரம் வெடிக்கலாம் என்று அஞ்சப்படுவது குறித்த செய்தி;

இலங்கை மலையக மண்சரிவில் இன்று மேலும் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டிருக்கும் நிலையில் இதில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கையில் நீடிக்கும் குழப்பம் குறித்து ஒரு செவ்வி

புனித பாப்பரசரின் இலங்கைக்கான விஜயம் ஏற்கனவே திட்டமிட்டபடி ஜனவரி மாதம் 13 முதல் 15 ஆம் திகதி வரை நடக்கும் என்று திருகோணமலை மறைமாவட்ட கத்தோலிக்க ஆயர் கிங்ஸிலி சுவாம்பிள்ளை தெரிவித்துள்ளது குறித்த செய்தி;

விளையாட்டரங்கம் ஆகியவற்றை கேட்கலாம்.