மலேசியாவில் நாடற்ற தமிழர்கள் படும் கஷ்டங்கள்
Share
Subscribe
உலகில் நாடற்றவர்கள் என்ற நிலையில் சுமார் ஒரு கோடிப் பேர் இருப்பதாக கூறும் ஐநா அகதிகள் நல அமைப்பான யு என் ஹெச் சி ஆர், பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ளும் நாடற்ற மக்களுக்கு பிரஜாவுரிமை கிடைக்கச் செய்வதற்கான பத்து ஆண்டுகால செயல்திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.
தமிழர்கள் அதிகமான அளவில் நாடற்ற நிலையில் வாழும் இடம் என்றால் அது தற்போது மலேசியாதான்,
அங்கு நாடற்றவர்களாக வாழும் தமிழர்களின் எண்ணிக்கை தொடர்பிலும் அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் பற்றியும் மலேசியாவின் செலாங்கொர் மாகாண அமைச்சர் ஹிந்த்ராஃப் கட்சியின் கணபதி ராவ் தெரிவிக்கும் கருத்துகள்
