நவம்பர் 5, 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (05-11-2014) பிபிசி தமிழோசையில்
அமெரிக்க நாடாளுமன்ற மற்றும் மாகாண ஆளுநர் தேர்தல்களில் அதிபர் ஒபாமாவின் எதிர்கட்சிக்கு கூடுதலான வெற்றிகள் கிடைத்துள்ளது குறித்த செய்திகள்;
இலங்கை ஜனாதிபதிக்கான தேர்தலில் மூன்றாவது முறையாக தான் போட்டியிடமுடியுமா என்று இலங்கை உச்சநீதிமன்றத்திடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விளக்கம் கோரியுள்ளது குறித்த செய்திகள்;
இலங்கையில் பாதுகாப்பு அமைச்சின் முன் அனுமதி பெறாமல் வடக்குப் பிராந்தியத்துக்கு வெளிநாட்டுப் பிரஜைகள் செல்வதற்கு விதிக்கப்பட்டிருக்கும் தடைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்ய முடியும் என்று Lawyers Collective என்ற சட்டவல்லுநர்களின் அமைப்பு கூறியுள்ளது குறித்த செய்திகள்
இலங்கை இராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி சரத்பொன்சேகா வெளிநாடு செல்ல அனுமதிக்கப்பட்டிருப்பது குறித்த செய்தி;
இலங்கையின் கிழக்கே வட்டமடு பகுதியிலுள்ள சர்ச்சைக்குரிய காணிகளில் விவசாயிகள் வேளாண்மை செய்யலாம் என்று பொத்துவில் நீதிமன்றம் அனுமதியளித்திருப்பது குறித்த செய்தி;
தமிழகத்தில் நடந்த கிரானைட் மற்றும் கனிமவள முறைகேடுகள் தொடர்பில் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு மாறாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருப்பதாக குற்றம் சுமத்தும் செயற்பாட்டாளரின் பேட்டி ஆகியவற்றைக் கேட்கலாம்.
உலகப்புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கர் எழுதியிருக்கும் சுயசரிதையை இன்று அவர் வெளியிட்டிருப்பது குறித்த செய்தி;
இந்தியாவில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் மனைவியை கணவன் அடிப்பது சரிதான் என 54 சதவீத ஆண்களும் 51 சதவீத பெண்களும் கூறுவதாக தெரிவிக்கப்பட்டிருப்பது எதைக் காட்டுகிறது என்று மனித உரிமை ஆர்வலரும் வழக்கறிஞருமான சுதா ராமலிங்கத்தின் செவ்வி ஆகியவற்றைக் கேட்கலாம்.
