மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களின் தேவை 'பாதுகாப்பான இடம்': இந்திய உதவித் தூதர்
Share
Subscribe
இலங்கையில் பதுளை மாவட்டத்தில் மண்சரிவில் புதையுண்ட மீரியாபெத்தை தேயிலைத் தோட்டப் பகுதிக்கு கண்டியிலுள்ள இந்திய உதவித் தூதரகத்தின் உதவித் தூதர் ஏ. நடராஜன் இன்று வியாழக்கிழமை சென்று பார்வையிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய அரசாங்கத்தின் சார்பில் உதவித் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் உதவித் தூதுவர் கூறியுள்ளார்.
கொஸ்லாந்தை நிலைமைகள் தொடர்பில் இந்திய உதவித் தூதுவர் ஏ. நடராஜன் அவர்களிடம் பேசினார் பிபிசி தமிழோசையின் ஜெயப்பிரகாஷ் நல்லுசாமி.
