9 நாட்கள் கடந்துள்ள நிலையில்; மண்சரிவுக்குள்ளான மீரியாபெத்தை பகுதியின் நிலவரம்

Nov 06, 2014, 04:21 PM

Subscribe

இலங்கையில் பதுளை மாவட்டத்தில் மண்சரிவில் புதையுண்ட மீரியாபெத்தை தேயிலைத் தோட்டத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்தும் நடந்துவருகின்றன.

இதுவரை 9 சடலங்களே மீட்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 30 பேரின் சடலங்கள் இன்னும் புதையுண்டிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.

ஊவா சமூக வானொலியின் செய்தியாளர் எஸ். அஷோக் பிபிசி தமிழோசைக்கு வழங்கிய தகவல்களை நேயர்கள் இங்கு கேட்கலாம்.