நவம்பர் 06 - பிபிசி தமிழோசை நிகழ்ச்சிகள்

Nov 06, 2014, 04:45 PM

Subscribe

இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்…

• இலங்கையில் நிலச்சரிவு நடந்த பதுளை மாவட்டத்தில் நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகளின் தற்போதைய நிலவரம் குறித்த செய்திகள்,

• இலங்கையில் முஸ்லிம் பெரும்பான்மை பகுதியான கல்முனையை மையமாகக் கொண்டு புதிய மாவட்டம் ஒன்றை உருவாக்க முடியாது என்று இலங்கைப் பிரதமர் கைவிரித்ததை அடுத்து இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வந்த ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் நிலைப்பாடு பற்றிய ஒரு பேட்டி,

• இலங்கையில் மன்னார் மாவட்டத்தில் கடற்படை ஆக்ரமித்த கிராமப் பிரச்சினை பற்றி பாதுகாப்புச் செயலரை சந்தித்த மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் தெரிவிக்கும் கருத்துக்கள்,

• பேஸ்புக் பக்கங்களில் வெளிவரும் கருத்துக்களை தணிக்கை செய்ய பேஸ்புக்குக்கு கோரிக்கை விடுக்கும் நாடுகளில் இரண்டாவது இடத்தை இந்தியா வகிப்பது பற்றிய ஒரு செய்தி ஆகியவை இடம்பெறுகின்றன.