இன்றைய ( நவம்பர் 7) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Nov 07, 2014, 04:22 PM

Subscribe

இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில் இலங்கை மனித உரிமை மீறல்கள் குறித்த ஐநா மன்ற விசாரணைக்கு இலங்கை அரசு ஏற்படுத்தும் தடங்கல்கள் குறித்து ஐநா மனித உரிமை ஆணையர் கண்டனம் தெரிவித்திருப்பது பற்றிய செய்தி

இலங்கை குறித்த இந்த ஐநா விமர்சனத்துக்கு இலங்கை மனித உரிமை ஆர்வலர் அருட்தந்தை மங்களராஜன் தெரிவிக்கும் கருத்து

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையாக தான் போட்டியிடமுடியுமா என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உச்ச நீதிமன்றத்திடம் ஆலோசனை கேட்ட விஷயத்தில் விசாரணை முடிந்துவிட்ட்தாக உச்சநீதிமன்றம் அறிவித்திருப்பது பற்றிய செய்தி

ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பாக பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது பற்றி இன்று நடந்த ஆலோசனைக் கூட்டம் பற்றிய ஒரு பேட்டி

இந்திய அமைதிகாக்கும் படையினர் இலங்கையில் தமிழ்ப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த்தாக அமைச்சர் கருணா எழுப்பிய குற்றசாட்டுக்கு இந்தியா தெரிவித்த கருத்து பற்றிய செய்தி ஆகியவை

இடம்பெறுகின்றன