"சமூக நீதி கிடைக்க சாதி ரீதியான ஜனத்தொகை கணக்கெடுப்பு தேவை"
Share
Subscribe
சாதி ரீதியான ஜனத்தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளை இந்திய உச்சநீதிமன்றம் ரத்துசெய்துள்ளது. இந்த தீர்ப்பு சமூக நீதிக்கு எதிரான தீர்ப்பு என தமிழோசயில் பேசிய மனித உரிமை செயற்பாட்டாளரான ஓய்வுபெற்ற கல்லூரி பேராசிரியர் அ மார்க்ஸ் தெரிவித்தார். பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு சமூக நீதி கிடைக்க வேண்டுமானால், சாதி ரீதியான ஜனத்தொகை கணக்கெடுப்பும், அதன் அடிப்படையிலான இட ஒதுக்கீடும் தேவை அவர் வாதிட்டார்.
