நவம்பர் 8, 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Nov 08, 2014, 07:01 PM

Subscribe

இன்றைய (08-11-2014) பிபிசி தமிழோசையில்

இலங்கை மனித உரிமை மீறல்கள் குறித்து ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்திருந்த விமர்சனத்துக்கு இலங்கை அரசின் பதில்;

இலங்கையின் மலையக மண்சரிவில் நடந்து வரும் சடலங்களை மீட்கும் நடவடிக்கைகளை நிறுத்தும்படி பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவிப்பதாக கூறும் மீட்புப்பணிகளை மேற்பார்வை செய்யும் ராணுவ அதிகாரியின் செவ்வி;

இலங்கை நீதிமன்றத்தில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஐந்து இந்திய மீனவர்களின் மேல் முறையீட்டு மனு திங்களன்று இலங்கையின் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளது குறித்த செய்தி;

இந்தியாவில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும்படி சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தவறு என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கும் நிலையில் ஜாதிவாரி கணக்கெடுப்பு தேவையா இல்லையா என்பது குறித்து எழுத்தாளரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ரவிக்குமார் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளரும் ஓய்வுபெற்ற பேராசிரியருமான அ மார்க்ஸ் ஆகியோரின் விரிவான செவ்விகள்;

நேயர் நேரம் ஆகியவற்றை கேட்கலாம்.