நவம்பர் 9, 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Nov 09, 2014, 06:11 PM

Subscribe

இன்றைய (09-11-2014) பிபிசி தமிழோசையில்

பெர்லின் சுவர் தகர்க்கப்பட்ட நிகழ்வின் 25ஆவது நினைவு தினம் ஜெர்மனியில் நடந்துள்ளது குறித்த செய்திகள்;

இலங்கையின் மலையக மண்சரிவில் நடந்து வரும் சடலங்களை மீட்கும் நடவடிக்கைகளை நிறுத்துவதாக மீட்புப்பணிகளை மேற்பார்வை செய்யும் ராணுவ அதிகாரி அறிவித்திருப்பது குறித்த செய்திகள்;

இந்திய பிரதமர் நரேந்திரமோடி தனது அமைச்சரவையில் 21 புதிய அமைச்சர்களை சேர்த்திருப்பது குறித்த ஆய்வுக்கண்ணோட்டம்;

பார்க்கின்ஸன் எனப்படும் மூளை இயங்கு நரம்பியல் மண்டல சீரழிவு நோய்க்கு ஸ்டெம் செல்ஸ் எனப்படும் குருத்தணுச் செல்களைக்கொண்டு சிகிச்சையளிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டிருப்பது குறித்த செய்தி;

தமிழ்நாட்டின் முதியோர் பராமரிப்பு குறித்து ஆராயும் வேர்களை வெறுக்கும் விழுதுகள் பெட்டகத்தொடரின் முதல் பகுதி ஆகியவற்றைக் கேட்கலாம்