நவம்பர் 10, 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Nov 10, 2014, 04:48 PM

Subscribe

இன்றைய (10-11-2014) பிபிசி தமிழோசையில்

இலங்கையில் மரணதண்டனை விதிக்கப்பட்ட ஐந்து தமிழக மீனவர்கள் தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திரமோடி இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷவிடம் பேசியிருப்பது குறித்த செய்திகள்;

இந்த ஐந்து மீனவர்களை உடனடியாக இந்தியா கொண்டுவருவதே சரி என்று கூறும் நிரபராதி மீனவர் விடுதலைக்கான கூட்டமைப்பின் தலைவர் அருளானந்தனின் செவ்வி;

இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் மூன்றாவது முறை போட்டியிட முடியுமா என மஹிந்த ராஜபக்ஷ உச்சநீதிமன்றத்திடம் கேட்டிருந்த ஆலோசனை குறித்து நீதிமன்றம் தமது பதிலை அவருக்கு வழங்கியிருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளது குறித்த செய்திகள்;

இது குறித்து இலங்கை வழக்கறிஞர்களின் சங்கத்தின் கருத்துக்கள்

இந்தியாவில் ஊர் பஞ்சாயத்தின் உத்தரவின்படி பெண் ஒருவர் நிர்வாணமாக கழுதை மீது ஏற்றப்பட்டு ஊர்வலமாக அனுப்பப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பது குறித்த செய்தி;

இன்று காலமான டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியரும் தமிழ்நாட்டின் சமூக அரசியல் ஆய்வாளருமான எம் எஸ் எஸ் பாண்டியனின் சமூக ஆய்வுலக பங்களிப்பு குறித்து தமிழக சமூக அரசியல் ஆய்வாளர் எஸ் வி ராஜதுரையின் கருத்துக்கள்;

விளையாட்டரங்கம் ஆகியவற்றை கேட்கலாம்.