நவம்பர் 12 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (12-11-2014) பிபிசி தமிழோசையில்
இலங்கையில் போதை மருந்து கடத்திய குற்றச்சாட்டின்கீழ் மரணதண்டனை விதிக்கப்பட்ட ஐந்து தமிழக மீனவர்களின் மேல் முறையீட்டு மனுவை வாபஸ் பெற்றால் அவர்களை இரண்டொரு நாட்களில் விடுதலை செய்யத்தயார் என்று இலங்கை அதிபர் கூறியிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள்;
இது குறித்து பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கான சங்கத்தின் தலைவர் செவ்வி;
இலங்கையில் பிரதான எதிர்கட்சிகள் இணைந்து இன்று நடத்தியிருக்கும் மாபெரும் பேரணி குறித்த செய்திகள்;
தமிழ்நாட்டில் இருக்கும் இலங்கை அகதிகள் மீண்டும் இலங்கை திரும்ப இந்தியா உதவ வேண்டும் என்று சமீபத்தில் சென்னை வந்த இலங்கை வடமாகாண முதல்வர் சி வி விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்திருப்பது குறித்து குறித்து தமிழ்நாட்டில் இருக்கும் ஈழ ஏதிலியர் மறுவாழ்வு கழகத்தின் தலைவர் சந்திரஹாசனின் பேட்டி;
இந்தியாவின் சத்தீஷ்கர் மாநிலத்தில் அதிகரிக்கும் கருத்தடை அறுவை சிகிச்சை உயிரிழப்புக்கள் தொடர்ந்து அதிகரித்துவருவது குறித்த செய்திகள்;
இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவை வெள்ளப்பெருக்கிலிருந்து பாதுகாப்பதற்காக அங்கு கடல்ஓரத்தில் பெரும் சுவர் ஒன்று கட்டியெழுப்பப்படுவதன் சாதக பாதகங்கள் குறித்த செய்திப்பெட்டகம் ஆகியவற்றைக் கேட்கலாம்.
