'ரோகண விஜேவீர : அவசர சாகசப் போராட்ட நாயகன்'

Nov 13, 2014, 03:38 PM

Subscribe

இலங்கையின் சிங்கள கிராமங்களின் அதிருப்தியை பிரதிபலித்த மக்கள் விடுதலை முன்னணி(ஜே.வி.பி)யின் ஸ்தாபகரான ரோகண விஜேவீர அவர்கள், இலங்கையின் இடதுசாரி அரசியலில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியவர் என்று இலங்கையின் இடதுசாரி அரசியல் ஆய்வாளரான பி. ஏ. காதர் அவர்கள் கூறியுள்ளார்.

இருந்தபோதிலும், விஜேவீர அவர்கள் இடதுசாரி இளம்பருவக் கோளாறுடன் சம்பந்தப்பட்ட ஒரு கொள்கைப் போக்கை கடைப்பிடித்ததாகக் கூறும் காதர் அவர்கள், அவரது இரண்டு கிளர்ச்சிகளும் கூட அவசரப்பட்ட, சாகசங்களை மையமாகக் கொண்ட போராட்டங்களாக முடிந்துவிட்டன என்றும் குறிப்பிட்டார்.

ரோகண விஜேவீர அவர்கள் கொலை செய்யப்பட்டு இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவுபெறும் நிலையில், இலங்கை அரசியலில் அவர் ஏற்படுத்திய தாக்கம் குறித்து காதர் அவர்கள் பிபிசியிடம் உரையாடினார். இலங்கையில் தென்பகுதி சிங்கள இளைஞர்களுக்கு தலைமையேற்று இரண்டு இடதுசாரி ஆயுதப் போராட்டங்களை நடத்தியவர் விஜேவீர.

விஜேவீரவை ஒரு இனவாதியாகப் பார்க்க முடியாது என்று கூறும் காதர் அவர்கள், இந்தச் செவ்வியில், மலையக மக்கள், தமிழரின் சுயநிர்ணயப் போராட்டம் ஆகியவை குறித்த விஜேவீரவின் நிலைப்பாடு ஆகியவை உட்பட பல விடயங்களை ஆராய்கிறார்.

அவரது முழுமையான செவ்வியை இங்கு கேட்கலாம்.