நவம்பர் 14 - தமிழோசை நிகழ்ச்சிகள்

Nov 14, 2014, 04:33 PM

Subscribe

இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்…

• ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் நடைபெற்ற பந்தய சூதாட்ட முறைகேடு விவகாரத்தை ஆராய நியமிக்கப்பட்ட முட்கல் கமிட்டி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சிலரின் பெயர்களை உச்சநீதிமன்றம் வெளியிட்டிருப்பது பற்றிய செய்திக்குறிப்பு,

• கலாச்சார கண்காணிப்புக்கு எதிராக தற்போது இந்தியா முழுவதும் நடந்துவரும் "கிஸ் ஆஃப் லவ்" போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சென்னை ஐஐடி மாணவ, மாணவிகள் கல்லூரி வளாகத்தில் நடத்திய போராட்டம் பற்றிய செய்தி,

• அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் மைய நூலகத்துக்குள் பல்கலைக்கழக மாணவிகள் வர பல்கலைக்கழக நிர்வாகம் விதித்த தடையை அலகாபாத் உயர்நீதிமன்றம் விமர்சித்திருப்பது பற்றிய செய்தி,

• ஐரோப்பாவில் விடுதலைப்புலிகள் அமைப்பு மீது விதிக்கப்பட்ட தடை குறித்து ஐரோப்பிய நீதிமன்ற உத்தரவுக்கு மேல் முறையீட்டை இலங்கை அரசு செய்யாது என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் கூறியிருப்பது பற்றிய செய்தி,

• இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு வந்து விளையாடிய ஒரு நாள் போட்டிகளில் தொடர்ந்து தோல்வி அடைவது குறித்து இலங்கையில் எழும் சர்ச்சை பற்றிய செய்தி ஆகியவை கேட்கலாம்.