நவம்பர் 16 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Nov 16, 2014, 05:09 PM

Subscribe

இன்றைய (16-11-2014) பிபிசி தமிழோசையில்

இலங்கை அமைதிப்பேச்சின்போது விடுதலைப்புலிகளுக்கு நார்வே தூதர் எரிக் சொல்ஹெய்ம் பணம் கொடுத்ததாக இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியிருப்பது குறித்த செய்தி;

இலங்கை அதிபர் தேர்தலை மனதில் வைத்து செய்யப்படும் பொய்க் குற்றச்சாட்டு இது என்று எரிக் சொல்ஹெய்ம் மறுத்துள்ளது குறித்த செய்தி;

இலங்கை வடமாகண சபை உறுப்பினர்களுக்கு எட்டு வாகனங்களை வழங்க இந்தியா முன்வந்திருப்பதை ஏற்க மறுப்பது ஏன் என்பது குறித்து வடமாகணசபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானத்தின் கருத்துக்கள்;

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து நீரைத் திறந்துவிட இயலாது என தமிழக முதல்வர் ஓ பன்னீர்செல்வம் கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு கடிதம் எழுதியுள்ளது குறித்த செய்தி;

இஸ்லாமிய அரசு தீவிரவாத குழுவால் கடத்திச் செல்லப்பட்ட அமெரிக்க தொண்டு நிறுவன ஊழியரின் மரணத்தைக் காட்டுவதாக கூறும் காணொளி ஒன்று இணையத்தில் பதிவேற்றப்பட்டிருப்பது தொடர்பான செய்தி;

வேர்களை வெறுக்கும் விழுதுகள் தொடரின் இரண்டாவது பகுதி ஆகியவற்றைக் கேட்கலாம்.