நவம்பர் 19 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Nov 19, 2014, 05:56 PM

Subscribe

இன்றைய (19-11-2014) பிபிசி தமிழோசையில்

போதைமருந்து கடத்திய குற்றச்சாட்டின்பேரில் மரணதண்டனை விதிக்கப்பட்ட ஐந்து தமிழக மீனவர்கள் இன்று விடுதலை செய்யப்பட்டிருப்பது குறித்த செய்திகள்;

இது குறித்து அவர்கள் குடும்ப உறுப்பினர்களின் மகிழ்ச்சி;

இதே வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை தமிழ் மீனவர்களும் விடுவிக்கப்படவேண்டும் என்று அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் விடுத்திருக்கும் கோரிக்கை குறித்த செய்தி;

இந்த விடுதலை குறித்து தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனின் பேட்டி;

வட இந்திய மாநிலமான ஹரியானாவில், சர்ச்சைக்குரிய சாமியார் ராம்பால் மஹாராஜின் ஆசிரம வளாகத்துக்குள், நான்கு பெண்கள் மற்றும் ஒரு குழந்தையின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கும் செய்திகள்;

நேற்று காலமான “அவள் அப்படித்தான்” தமிழ்த்திரைப்பட இயக்குனர் சி ருத்ரய்யா குறித்தும், அவரது “அவள் அப்படித்தான் திரைப்படம்” குறித்தும் திரைப்பட ஆய்வாளர் தியோடர் பாஸ்கரனின் செவ்வி;

இன்றைய பலகணியில் ஆப்பிரிக்காவில் கடல் கொள்ளையர்களின் முக்கியத் தளமாக நைஜிரியாவை அடுத்த கடல் பகுதி மாறிவருவது குறித்த பெட்டகம் ஆகியவற்றைக் கேட்கலாம்.