நவம்பர் 24 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Nov 24, 2014, 05:07 PM

Subscribe

இன்றைய (24-11-2014) பிபிசி தமிழோசையில்

மிகுந்த பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட இலங்கை அரசின் 2015-ம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் 95 பெரும்பான்மை வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது குறித்த செய்திகள்;

இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கும் மைத்ரிபால சிரிசேன, இந்த தேர்தலின்போது வன்முறைக்கு இடம்கொடுக்க வேண்டாமென வேண்டுகோள் விடுத்திருப்பது குறித்த செய்தி;

சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தர் பகுதியின் கத்தேலிக்க பள்ளிகளில் பள்ளிமுதல்வர்களை ‘பாதர்’ என்றழைக்கும் நடைமுறையை மாற்றியிருக்கும் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கருத்துக்கள்;

தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பான சார்க் அமைப்பின் இரண்டுநாள் மாநாடு வரும் நவம்பர் 26ஆம் தேதி நேபாளத் தலைநகர் காட்மாண்டில் தொடங்குவதையொட்டி, தெற்காசியப் பிரதேசத்தில் உள்ள பல மனித உரிமை அமைப்புகள் மற்றும் தன்னார்வக் குழுக்கள் நேற்றும், இன்றும் அங்கு மக்கள் சார்க் என்ற இணை கூட்டம் ஒன்றைக் கூட்டி , தெற்காசியப் பிரதேசத்தில் நிலவும் மக்கள் பிரச்சனைகளை வலியுறுத்தி பேசப்பட்ட விஷயங்கள் குறித்து அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட “பீப்பிள்ஸ் வாட்ச்” அமைப்பின் கௌரவ நிர்வாக இயக்குநர் ஹென்றி டிஃபேன் அவர்களின் செவ்வி;

அமெரிக்காவில் விளையாட்டுத் திடலில் பொம்மைத்துப்பாக்கி வைத்திருந்த 12 வயது கறுப்பினச் சிறுவனை காவல்துறையினர் சுட்டுக்கொன்ற சம்பவம் ஏற்படுத்தியிருக்கும் அதிர்வலைகள் குறித்த செய்திகள்

நிறைவாக விளையாட்டரங்கம் ஆகியவற்றைக் கேட்கலாம்.