நவம்பர் 25 - பிபிசி தமிழோசை நிகழ்ச்சி..
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்,
• அமெரிக்காவின் பெர்குசன் நகரில் கறுப்பின இளைஞர் ஒருவரை கடந்த ஆகஸ்டில் சுட்டுக்கொன்ற வெள்ளையினப் போலிஸ் அதிகாரி மீது வழக்கு தொடுப்பதில்லை என்று நீதிமன்ற நடுவர்கள் குழு முடிவு செய்ததை அடுத்து அமெரிக்காவின் பல பகுதிகளில் ஏற்பட்ட கொந்தளிப்பு பற்றிய செய்தி,
• ப்ளூ ஜுரத்துக்கான தடுப்பு மருந்தை உடலில் ஊசி மூலம் ஏற்றாமல், மூக்கின் மூலம் ஸ்ப்ரே செய்து ஏற்றும் முறையை கண்டுபிடித்த விஞ்ஞானிகள் குழுவில் இடம்பெற்றிருக்கும் இலங்கை விஞ்ஞானி அனுஷி ராஜபக்ஷவின் பேட்டி,
• இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கைவிட்ட மனைவி யசோதா பென், தனக்கு பாதுகாப்பு மற்றும் பிற உரிமைகள் பற்றி தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கோரியிருப்பது குறித்த செய்திக்குறிப்பு,
• காஷ்மீர் மாநில சட்டப்பேரவத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்திருப்பது பற்றிய செய்திக்குறிப்பு,
• பின்னர் அனைவர்க்கும் அறிவியல் ஆகியவை கேட்கலாம்.
