நவம்பர் 26 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (26-11-2014) பிபிசி தமிழோசையில்
இலங்கை அரச படைகளுடனான மோதல்களில் உயிர்நீத்த விடுதலைப்புலி அமைப்பின் உறுப்பினர்களை நினைவு கூரும் மாவீரர் தின நிகழ்வுகளை ஒட்டி யாழ்ப்பாணம் மற்றும் வன்னிப்பகுதிகளில் நிலவும் சூழல் குறித்த நேரடித்தகவல்கள்;
இதே மாவீரர்தின நிகழ்வுகள் தமிழ்நாட்டில் சில இடங்களில் நடந்திருப்பதும் மற்ற இடங்களில் தடுக்கப்பட்டிருப்பதுமான சூழல் குறித்த செய்திகள்;
திமுகவிலிருந்து விலகிய தமிழ்த்திரைப்பட நடிகை குஷ்பு இன்று காங்கிரஸ் கட்சியில் சேர்ந்திருப்பது குறித்த செய்தி;
இந்தியச் சிறைகளில் இருக்கும் கைதிகளில் சுமார் 53 விழுக்காட்டினர் தலித்துகள், பழங்குடியினர் மற்றும் முஸ்லீம்கள் என்று தேசிய குற்ற ஆவணங்கள் பதிவகத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன; இந்த புள்ளிவிவரங்கள் எதைக்காட்டுகின்றன என்பது குறித்து பீப்பிள்ஸ் வாட்ச் என்ற மனித உரிமை அமைப்பின் கௌரவ நிர்வாக இயக்குநர் ஹென்றி டிஃபேனின் செவ்வி;
வட இந்திய மாநிலமான ஹரியானாவில் அடிமாட்டு விலைக்கு விற்கப்படும் இந்திய மணப்பெண்கள் குறித்து பிபிசியின் ஆண்ட்ரூ நார்த் அனுப்பிய செய்திக்குறிப்பு;
பலகணியில், தைவானில் பாரம்பரிய விவசாயத்துக்கு திரும்பும் பட்டதாரிகள் குறித்து பிபிசியின் சிண்டி சு அனுப்பிய பெட்டகம் ஆகியவற்றைக் கேட்கலாம்.
