நவம்பர் 30 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Nov 30, 2014, 05:24 PM

Subscribe

இன்றைய (30-11-2014) பிபிசி தமிழோசையில்

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை அவரது அழைப்பின்பேரில், முஸ்லிம் காங்கிரஸின் தலைவர்கள் நேற்றிரவு சந்தித்துப் பேசியது குறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஹசன் அலி பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வி;

இலங்கையின் பிரதான எதிர்கட்சிகளின் சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கும் மைத்ரிபால சிரிசேனா தாம் ஆட்சிக்கு வந்தால் யாரையும் பழிவாங்க மாட்டேன் என்று அறிவித்திருப்பது குறித்த செய்தி;

இந்தியாவில் ரயில் தண்டவாளங்களில் அடிபட்டு உயிரிழப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டிருப்பது ஏன் என்பது குறித்த ஒரு ஆய்வுக்கண்ணோட்டம்;

சுவிசர்லாந்தில் குடிவரவை அதிரடியாக குறைப்பதற்கான பிரேரணையை அந்நாட்டு மக்கள் வாக்கெடுப்பில் நிராகரித்திருப்பது குறித்த செய்திகள்;

நிறைவாக வேர்களை வெறுக்கும் விழுதுகள் தொடரின் நான்காவது பகுதி ஆகியவற்றைக் கேட்கலாம்.