டிசம்பர் 1 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (01-12-2014) பிபிசி தமிழோசையில்
இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளராக போட்டியிடும் மைத்திரிபால சிறிசேனவுடன் 36 அமைப்புகளின் பிரதிநிதிகள் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திட்டிருப்பது குறித்து இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ள ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனின் பேட்டி;
எதிரணியின் பொதுவேட்பாளருடன் கைச்சாத்திடப்பட்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் தொடர்பில், இந்த விடயங்களில் பல ஆண்டுகளாக செயற்பட்டு வந்துள்ள இலங்கையின் மனித உரிமை ஆர்வலர்களில் ஒருவரான எஸ். பாலகிருஷ்ணனின் கருத்துக்கள்;
கிழக்கு மாகாணத்தில் இன்று அமளி துமளி நடந்திருப்பது குறித்த செய்தி;
உலக எயிட்ஸ் தினத்தையொட்டி இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தில் அதிகரித்துவரும் எச் ஐ வி தொற்று தொடர்பான விவரங்கள்;
வடஇந்திய மாநிலமான ஹரியானாவில் இரண்டு இளம் பெண்களை கேலி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, அந்த பெண்களால் உடனடியாக தாக்கப்பட்ட மூன்று வாலிபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளது குறித்த செய்தி;
தங்களை பாலியல் சில்மிஷம் செய்ததாக கூறப்படும் ஆண்களை சம்பந்தப்பட்ட பெண்களே தாக்கிய இந்த சம்பவத்தை பெண்ணியவாதிகள் எப்படி பார்க்கிறார்கள் என்பது குறித்து திராவிடர் கழகத்தைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் அருள்மொழியின் கருத்துக்கள்;
நிறைவாக விளையாட்டரங்கம் ஆகியவற்றைக் கேட்கலாம்.
