டிசம்பர் 3 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Dec 03, 2014, 04:37 PM

Subscribe

இன்றைய (03-12-2014) பிபிசி தமிழோசையில்

பெரியாறு அணை தொடர்பாக கேரளாவின் மேல்முறையீட்டைல் இந்திய உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பது குறித்த செய்திகள்;

இந்தியாவின் ஒரிசாவில் குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை முகாமில் அறுவை சிகிச்சையின்போது பெண்களின் வயிற்றை ஊதிப் பெரிதாக்க, சைக்கிளுக்குக் காற்றடிக்கும் பம்ப்புகளை மருத்துவர்கள் பயன்படுத்தியது தொடர்பான செய்திகள்;

இந்த நடைமுறை சரியா என்பது குறித்த ஒரு ஆய்வுக்கண்ணோட்டம்;

இந்தியாவில் இருக்கும் மனநலக் காப்பகங்களில் இருப்பவர்கள் விலங்குகளைவிட மோசமாக நடத்தப்படுவதாக அமெரிக்காவிலிருந்து செயல்படும் ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் தெரிவித்துள்ளது குறித்து, நீண்ட காலம் பெண்களுக்கான மனநலக் காப்பகத்தில் பணியாற்றியவரும் மனநலம் குன்றியவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் பெட்டர் சான்சஸ் அமைப்பை நடத்திவருபவருமான பொற்கொடியின் செவ்வி

இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் இருக்கும் இந்திய மீனவர்கள் உண்ணாவிரதம் இருப்பது குறித்த செய்திகள்;

தன் வீட்டு வளாகத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சார கட்-அவுட் வைக்க அனுமதி மறுத்தவரின் வீடு தாக்குதலுக்குள்ளானதாக புகார் தெரிவிக்கப்பட்டிருப்பது குறித்த செய்தி;

இலங்கையில் கால்பந்து விளையாட்டுக்கு ஒரு பெரிய ஏற்றத்தைக் கொடுக்கும் வகையில், சர்வதேசக் கால்பந்து சம்மேளனமான ஃபிஃபாவின் ஆதரவில் வடக்கே யாழ்ப்பாணத்தின் அரியாயலையில் சிறப்பு மையம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது குறித்த செய்தி;

நிறைவாக பலகணியில் உலகின் மிகப் பெரும் தொழிற்சாலை விபத்து என்று கூறப்படும் போபால் விஷ வாயுக் கசிவு விபத்து நடந்து 30 ஆண்டுகளான பிறகும், அங்கே தொடரும் பாதிப்புகள் குறித்து போபாலில் இருந்து பிபிசியின் யோகீதா லெமாயி அனுப்பிய பெட்டகம் ஆகியவற்றைக் கேட்கலாம்.