முத்தலாக் முறையை ஒழிக்க புதிய சட்டம் வேண்டும் - பாரதிய முஸ்லிம் மகளிர் இயக்கம் தமிழ்நாடு அமைப்பாளர் ஜெய்புன்னிஸா

Dec 07, 2014, 03:24 PM

Subscribe

முஸ்லிம் கணவன் ஒருவர் மூன்று முறை தலாக் என்று கூறியே மனைவியை விவாகரத்து செய்யக்கூடிய முத்தலாக் முறையை ஒழிக்க சட்டம் வர வேண்டும் என பாரதிய முஸ்லிம் மகளிர் இயக்கத்தின் வருடாந்த மாநாட்டில் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒற்றை சிவில் சட்டம் வருவதை தாங்கள் ஆதரிக்கவில்லை என்றாலும், இஸ்லாமிய விழுமியங்களுக்கு அமையவே முஸ்லிம் சமூகத்தில் மகளிர் நலனை பாதுகாக்க புதிதாக சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என இந்த அமைப்பு வாதிடுகிறது. தவிர முஸ்லிம் திருமணத்திலும் ஆண்களின் திருமண வயது 21 என்றும் பெண்களின் திருமண வயது 18 என்றும் அதிகரிக்கப்பட வேண்டும் என பாரதிய முஸ்லிம் மகளிர் இயக்கத்தின் தமிழ்நாடு அமைப்பாளர் ஜெய்புன்னிஸா ரியாஸ்பாபு தெரிவித்தார். தொலைபேசி, இணையம் வழியாக தலாக் சொல்லி கணவன் மனைவியை விவாகரத்து செய்யும் சம்பவங்கள் நடந்து வரவே செய்வதாக குறிப்பிட்ட ஜெய்புன்னிஸா, சில முஸ்லிம் ஜமாத்துகள் இப்படியான விவாகரத்துகளை ஏற்றுக்கொள்வதாகவும், இதனால் பெண்களும் அவர்களுடைய பிள்ளைகளும் பெரும் பாதிப்புகளுக்கு ஆளாவதாவும் கூறி வருந்தினார். எனவே முத்தலாக் முறை முற்றாக ஒழிய புதிய சட்டம் அவசியம் என அவர் குறிப்பிட்டார். அவர் தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை நேயர்கள் இங்கு கேட்கலாம்.