'நவ்ருவுக்கு கடத்த கடும் எதிர்ப்பு'

Dec 07, 2014, 03:35 PM

Subscribe

மகப்பேற்றுக்காக ஆஸ்திரேலிய பெருநிலப்பரப்புக்கு கொண்டுவரப்பட்ட ஒரு இலங்கையைச் சேர்ந்த தமிழ் குடும்பத்தை மீண்டும் நவ்ரு தீவுகளில் உள்ள தடுப்பு முகாமுக்கு ஆஸ்திரேலிய அதிகாரிகள் பலவந்தமாக அனுப்பி வைத்தது அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பேர்த்தில் நடந்த இந்தச் சம்பவத்தின் போது அகதிகளுக்கான செயற்பாட்டாளர்களும், ஊர் மக்களும் அவர்களை நவ்ரு தீவுக்கு கடத்த வேண்டாம் என்று போலிஸ் அதிகாரிகளுடன் போராட்டியுள்ளனர். ஓரளவு தள்ளு முள்ளும் அங்கு ஏற்பட்டுள்ளது.

அந்த மகப்பேற்றுத் தாயின் மனநலம் இந்த பலவந்த இடமாற்றத்தால் மிகவும் மோசமாக பாதிக்கப்படும் என்று செயற்பாட்டாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து ஆஸ்திரேலிய அகதிகளுக்கான செயற்பாட்டாளர்களில் ஒருவரான பால விக்னேஸ்வரன் அவர்கள் தமிழோசைக்கு தந்த தகவல்களை இங்கு கேட்கலாம்.