டிசம்பர் 7 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய பிபிசி (07-12-2014) தமிழோசையில்,
இலங்கையின் வடக்கே ராணுவம் தமது நிலங்களை பலவந்தமாக கைப்பற்றியதாக முஸ்லீம்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் குறித்த செய்திகள்;
முஸ்லிம் கணவர் ஒருவர் மூன்று முறை தலாக் என்று கூறி மனைவியை விவாகரத்து செய்யும் முத்தலாக் முறையை ஒழிக்க சட்டம்தேவையென பாரதிய முஸ்லிம் மகளிர் இயக்க மாநாட்டில் தீர்மானம் இயற்றப்பட்டது குறித்து பாரதிய முஸ்லிம் மகளிர் இயக்கத்தின் தமிழ்நாடு அமைப்பாளர் ஜெய்புன்னிஸா ரியாஸ்பாபுவின் பேட்டி;
ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரிய இலங்கை தமிழ்க்குடும்பத்தை ஆஸ்திரேலிய நிலப்பரப்பில் இருந்து நவுருவுக்கு பலவந்தமாக கொண்டுசென்றதாக அந்நாட்டு அகதி செயற்பாட்டாளர்கள் விமர்சித்திருப்பது குறித்து ஆஸ்திரேலிய அகதிகளுக்கான செயற்பாட்டாளர்களில் ஒருவரான பால விக்னேஸ்வரனின் செவ்வி;
நிறைவாக வேர்களை வெறுக்கும் விழுதுகள் தொடரின் ஐந்தாம் பகுதி ஆகியவற்றைக் கேட்கலாம்.
