வேர்களை வெறுக்கும் விழுதுகள் 5: முதுமக்கள்தாழிகள் முதியோர்கொலைக்கான சான்றுகளா?

Dec 07, 2014, 05:57 PM

Subscribe

தமிழர்களின் தொன்மைக்கான முக்கிய சான்றுகளில் ஒன்று முதுமக்கள் தாழிகள். சுமார் 3000 ஆண்டுகால தமிழர் வாழ்வியலுக்கான வலுவான சான்றுகளாக இந்த முதுமக்கள் தாழிகள் திகழ்கின்றன. இறந்தவர் சடலங்களை பெரிய பானைகளில் வைத்து பழந்தமிழர்கள் புதைக்கும் வழக்கம் கொண்டிருந்தனர் என்பதற்கான தொல்லியல் சான்றுகளே இந்த முதுமக்கள் தாழிகள்.

அந்த அளவுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தமிழ்நாட்டின் முதுமக்கள் தாழிகளுக்குள் வைத்து புதைக்கப்பட்ட மனித உடல்கள் கணிசமானவை உட்கார்ந்த நிலையில் வைத்து புதைக்கப்பட்டிருப்பதை தொல்லியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். விறைத்துப்போன மனித சடலத்தை முதுமக்கள் தாழியின் சிறிய வாய்க்குள் நுழைத்து, அந்த பானைக்குள் உட்கார்ந்த நிலையில் சம்மணமிட்டு அமர வைக்கமுடியாது என்பதாலும், இந்த முதுமக்கள் தாழிகள் தமிழ்நாட்டில் கண்டெடுக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் தம் முன்னோர்கள் நீண்டநாள் மரணத்தை தழுவாத வயதான முதியோர்களை முதுமக்கள் தாழிகளில் உயிருடன் வைத்து புதைத்ததாக பரவலாக இன்றும் நம்புவதாலும், இந்த முதுமக்கள் தாழிகள் என்பவை பழந்தமிழரின் முதியோர் கொலைக்கான சான்றுகளாகவும் இருக்குமா? இந்த கேள்விக்கான பதிலை ஆராய்கிறார்கள் இந்திய தொல்லியல்துறையின் தென்மணடல இயக்குநர் சத்யபாமா பத்ரிநாத் மற்றும் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை பேராசியர் ஜே ஆர் சிவராமகிருஷ்ணன் ஆகியோர்.