டிசம்பர் 8 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (08-12-2014) பிபிசி தமிழோசையில்
இலங்கை ஜனாதிபதித் தேர்தலில், ஆளும் கூட்டணியிலுள்ள முஸ்லிம் கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளதாக வெளியான செய்திகள் குறித்து அந்த கட்சியின் பொதுச்செயலர் ஒய் எல் எஸ் ஹமீத் பிபிசி தமிழோசைக்கு அளித்த பிரத்யேக செவ்வி;
இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இன்று தம் அரசுடன் இணைந்திருப்பதாக இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளது குறித்த செய்திகள்;
இலங்கை ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முடிந்திருப்பது குறித்த செய்தி;
மாலத்தீவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து அங்கு நீடிக்கும் கடும் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் மாலத்தீவின் தலைநகர் மாலேயில் மேலும் மூன்று நாட்களுக்கு பொது விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது குறித்த செய்தி;
குறித்து அகிம்சை மற்றும் அமைதிக்கான சர்வதேச காந்தி கழகம் என்ற தன்னார்வ அமைப்பை மதுரையிலிருந்து நடத்தி வரும் பேராசிரியரும் காந்திய சிந்தனையாளருமான முனைவர் ஜெயப்பிரகாசத்தின் பிரத்யேக செவ்வி;
டில்லியில் பாலியல் வல்லுறவு சம்பவத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள வாடகை வண்டி ஓட்டுனர், மூன்று நாட்களுக்கு காவல்துறை காவலில் விடப்பட்டுள்ளது குறித்த செய்தி
நிறைவாக விளையாட்டரங்கம் ஆகியவற்றைக் கேட்கலாம்.
