டிசம்பர் 10 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Dec 10, 2014, 05:07 PM

Subscribe

இன்றைய (10-12-2014) பிபிசி தமிழோசையில்

பாகிஸ்தான் பள்ளி மாணவி மலாலா யூசுப் சாயிக்கும், இந்தியாவின் கைலாஷ் சத்யார்த்திக்கும் நொபல் பரிசு இன்று வழங்கப்பட்டுள்ளது குறித்த செய்திகள்;

இலங்கையின் மலையகத்தைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்கள், அரசிலிருந்து விலகி, ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளருக்கு ஆதரவளிப்பது ஏன் என்பது குறித்து மலையக மக்கள் முன்னணியைச் சேர்ந்த வீ ராதாகிருஷ்ணனின் செவ்வி;

இலங்கை ஜனாதிபதித்தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் வெற்றிபெற்றால் 100 நாட்களில் தகவல் அறியும் உரிமைச்சட்டம் நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறித்த செய்தி;

இலங்கையின் ஜனாதிபதித்தேர்தலில் பங்கேற்கும் எல்லா அரசியல்கட்சித்தலைவர்களும் தேர்தல் பிரச்சாரத்தின்போதும் தேர்தலுக்குப்பிறகும் வன்முறைகளில் ஈடுபடக்கூடாது என்று எச்சரிக்கப்படவேண்டும் என்று மோதல்களை தடுப்பதற்கான சர்வதேச தன்னார்வ அமைப்பான ஐசிஜி என்று சுருக்கமாக அழைக்கப்படும் International Crisis Group அறிக்கை வெளியிட்டிருப்பது குறித்த செய்திகள்

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திருப்பதி வந்தபோது செய்தி சேகரிக்கச் சென்ற தமிழக செய்தியாளர்கள் தாக்கப்பட்டதாக புகார்கள் கொடுக்கப்பட்டிருப்பது குறித்த செய்தி;

இந்தியாவிற்குள் தங்கம் கடத்தப்படுவது அதிகரித்திருப்பதாக அரசு தரப்பில் அச்சம் வெளியிடப்படும் நிலையில், தமிழகத்தின் தங்கக்கடத்தல் விவகாரம் எப்படியிருக்கிறது என்பதை ஆராயும் செய்தித்தொகுப்பு;

தற்கொலைக்கு முயல்வது குற்றச்செயல் என்று கூறும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 309 நீக்கப்படும் என இந்திய நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறித்த செய்தி;

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் நிர்வாகிகளுக்கான தேர்தல் தேதியை ஒத்திவைக்கும் யோசனையை இந்திய உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டிருப்பது குறித்த செய்தி;

கடவுள் மறுப்பாளர்கள், மனித நேயப் பற்றாளர்கள் பலர் அரசுகளால் தொந்தரவு செய்யப்படுவதாகக் கூறும் அறிக்கை குறித்த செய்தி ஆகியவற்றைக் கேட்கலாம்.