டிசம்பர் 14 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Dec 14, 2014, 04:30 PM

Subscribe

இன்றைய (14-12-2014) பிபிசி தமிழோசையில்,

பெருவில் நடந்து முடிந்த ஐநா மன்றத்தின் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச மாநாட்டின் முடிவில் எட்டப்பட்டிருக்கும் ஒப்பந்தத்தின் சாதக பாதகங்கள் குறித்த ஒரு அலசல்;

தமிழ்நாட்டுக்கும் கேரளாவிற்கும் இடையில் தொடர்ந்து தாவாவில் சிக்கியிருக்கும் பெரியாறு அணைக்கு அருகில் வேறொரு அணையை கேரள அரசு கட்டினால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் தாக்கம் பற்றிய ஆய்வு மேற்கொள்ள கேரள அரசுக்கு இந்திய அரசு அனுமதி அளித்திருப்பதை தமிழக அரசு கண்டித்திருப்பதன் காரணத்தை அலசும் பேட்டி;

இந்திய இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் வானத்தை நோக்கி சுட்டு விரட்டியதாக தமிழக மீனவர்கள் தெரிவித்திருப்பது குறித்த செய்தி;

நிறைவாக வேர்களை வெறுக்கும் விழுதுகள் தொடரின் ஆறாவது பகுதி ஆகியவற்றைக் கேட்கலாம்.