டிசம்பர் 15 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Dec 15, 2014, 05:15 PM

Subscribe

இன்றைய (15-12-2014) பிபிசி தமிழோசையில்

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள லிண்ட் கஃபே உணவகத்தில் ஆயுததாரி ஒருவரால் பலர் பிணைக் கைதிகளாகப் பிடித்துவைக்கப்பட்ட சம்பவம் குறித்த நேரடித்தகவல்கள்;

இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கவுள்ள மக்கள் முக்கிய ஜனநாயக சீர்திருத்தங்களை எதிர்பார்த்து வாக்களிக்க வேண்டும் என்று நூற்றுக்கணக்கான பல்கலைக்கழக அறிவுஜீவிகள் அறிக்கை வெளியிட்டுள்ளது குறித்து கண்டி பேராதனைப் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத் துறைத் தலைவரான பேராசிரியர் சுமதி சிவமோகனின் பிரத்யேக பேட்டி;

இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் அதிபர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான தேர்தல் பிரச்சாரத்தில் சிறைக்கைதிகள் பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது குறித்த செய்தி;

இந்தியச்சிறைகளில் இருக்கும் இலங்கை மீனவர்கள் விடுவிக்கப்படவேண்டும் என்று கோரி இலங்கை மீனவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருப்பது குறித்த செய்தி;

இந்தியாவில் கிறிஸ்துமஸ் பண்டிகையன்று மத்திய அரசு மேற்கொள்ளவிருக்கும் மாணவர்களுக்கான கட்டுரைப்போட்டிகள் தொடர்பில் எழுந்திருக்கும் சர்ச்சைகள் குறித்த செய்திகள்

இந்திய அரசு தரப்பில் அளிக்கப்பட்டிருக்கும் இந்த விளக்கம் எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு திருப்தியளிக்கவில்லை என்று கூறும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமியின் பேட்டி;

இந்திய ரெயில்வே பணியாளர் தேர்வில் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து கேள்வி ஒன்று இடம்பெற்றிருந்தது சர்ச்சையை தோற்றுவித்திருப்பது குறித்த செய்தி; நிறைவாக விளையாட்டரங்கம் ஆகியவற்றைக் கேட்கலாம்.