டிசம்பர் 17 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (17-12-2014) பிபிசி தமிழோசையில்
பாகிஸ்தானின் பெஷாவரில் பள்ளிக்கூட தாக்குதலில் கொல்லப்பட்ட 132 சிறார்கள் உள்ளிட்ட 141 பேருக்கான அஞ்சலிகள் தொடரும் பின்னணியில் பாகிஸ்தானின் பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதபிரச்சனையில் அடுத்து என்ன என்பது குறித்த ஆய்வுக்கண்ணோட்டம்;
பாகிஸ்தானின் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு, இந்திய நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது குறித்த செய்தி;
வடஇந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் ஒரு தனியார் பள்ளிக்கூடத்தின் முதல்வர் அடித்ததையடுத்து ஏழு வயது சிறுவன் உயிரிழந்துள்ளது குறித்த செய்தி;
தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் கொல்லப்பட்ட 11 வயது மாணவியின் கொலை தொடர்பில் ஒரு சிறுவனை காவல்துறை கைது செய்துள்ளது குறித்த செய்தி;
இலங்கை ஜனாதிபதித்தேர்தலில் அந்நாட்டு இராணுவத்தினர் மத்தியில் தற்போதைய ஜனாதிபதிக்கு ஆதரவாக பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது குறித்த செய்தி;
இதேவேளை இலங்கை ஜனாதிபதித்தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக போட்டியிடும் மைத்றிபால சிறிசேனவின் தேர்தல் பிரச்சார மேடை தாக்கப்பட்டு எரிக்கப்பட்டதாக புகார்கள் எழுந்துள்ளது குறித்த செய்தி;
தலாய் லாமா எனும் மதத் தலைவர் பதவியை வகிக்கும் கடைசி நபர் தானாவே இருக்கக் கூடும் என்று தற்போதைய தலாய் லாமா தெரிவித்திருப்பது குறித்த செய்தி ஆகியவற்றைக் கேட்கலாம்.
