அலை அலையாய் தமிழ் பேய்ப் படங்கள் - பெட்டகம்
Share
Subscribe
கடந்த இரண்டு மாதங்களாக தமிழ்த் திரையுலகில் வாரத்திற்கு ஒரு பேய்ப் படமாவது வெளியாகிக் கொண்டிருக்கிறது.
ரா, ஒரு பந்து நான்கு ரன், ஒரு விக்கெட், ஆ, 13ஆம் பக்கம் பார்க்க என்று செல்லும் இந்த வரிசையில் இந்த வாரம் பிசாசு ரிலீஸாகியிருக்கிறது.
பீஸா திரைப்படத்தின் வெற்றிதான் தற்போதைய பேய்ப் பட அலையைத் துவக்கிவைத்தது என்கிறார் சமீபத்தில் வெளிவந்து கவனிப்பைப் பெற்ற ரா படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அஷ்ரஃப் அலி.
இந்த பேய் தமிழ் திரைப்பட அலை குறித்த பிபிசியின் சிறிய ஒலிப்பெட்டகம்.
