திமுகவில் ஓரங்கட்டப்பட்டேன் - பாஜகவில் இணைந்துள்ள நெப்போலியன் பேட்டி

Dec 21, 2014, 04:11 PM

Subscribe

முன்னாள் மத்திய அமைச்சரும் சினிமா நடிகருமான நெப்போலியன் திமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார். சென்னை வந்த பாஜக தலைவர் அமித் ஷா முன்னிலையில் நெப்போலியன் அக்கட்சியில் சேர்ந்தார். திமுகவில் தான் செயல்படவிடாமல் ஓரங்கட்டப்பட்டதாக நெப்போலியன் குற்றஞ்சட்டினார். அக்கட்சியில் ஜனநாயகம் இல்லை என்பதால், தான் அரசியலில் இருந்தே ஒதுங்கி இருந்ததாகவும், பாஜகவினர் அழைத்ததன் பேரில் தற்போது அக்கட்சியில் சேர்ந்ததாகவும் தமிழோசையிடம் பேசிய நெப்போலியன் குறிப்பிட்டார். பிரதமர் நரேந்திர மோடி உலகத் தலைவராக விளங்கும் நிலையில், தமிழகத்தில் பாஜகவை வளர்க்க தான் உழைப்பேன் என்றும் அவர் குறிப்பிட்டார். 2009ஆம் ஆண்டு திமுக சார்பில் பெரம்பலூரிலிருந்து நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த நெப்போலியன் சென்ற ஐக்கிய முற்போக்கு அரசாங்கத்தில் சமூக நீதித் துறை துணை அமைச்சராக இருந்தார்.