டிசம்பர் 22 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Dec 22, 2014, 05:35 PM

இன்றைய (22-12-2014) பிபிசி தமிழோசையில்

இலங்கை அமைச்சர் பதவியிலிருந்து விலகியிருக்கும் ரிசாத் பதியுதீனும் அவரது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியும் நடக்கவிருக்கும் இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் எதிரணிக்கு ஆதரவளித்திருப்பது ஏன் என்பது குறித்து அவரது பிரத்யேக பேட்டி;

இந்த தேர்தலில் மைத்ரிபால சிரிசேனாவை ஆதரிப்பதாக அறிவித்திருக்கும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி தமிழோசைக்கு அளித்திருக்கும் செவ்வி;

இதற்கிடையே ஒருவேளை இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடையும் நிலை ஏற்பட்டால், இலங்கையின் அடுத்த ஜனாதிபதியிடம் தமது அரசு அமைதியான முறையில் ஆட்சியைக் கொடுக்கும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளது குறித்த செய்தி;

இலங்கை கிழக்கு மாகாணத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் தாழ்ந்த பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக ஆயிக்கணக்கான குடும்பங்கள் தமது வாழ்விடங்களை விட்டு வெளியேறியுள்ளது குறித்த செய்தி;

இலங்கை சிறைகளில் இருக்கும் தமிழக மீனவர்களில் 28 பேர் விடுதலை செய்யப்பட்டிருப்பது குறித்த செய்திகள்;

புலிகள், சிறுத்தைகள் போன்றவற்றின் உடற்பாகங்கள் பர்மா வழியாக சீனாவில் விற்கப்படுகின்ற வர்த்தகம் அண்மைய ஆண்டுகளில் மிகவும் அதிகமாகியுள்ளதாக இருபது ஆண்டுகால கணக்கெடுப்பு தரவுகளைக் கொண்டு நடத்தப்பட்டுள்ள புதிய ஆய்வு ஒன்று காட்டுவது குறித்த செய்தி;

நிறைவாக விளையாட்டரங்கம் ஆகியவற்றைக் கேட்கலாம்.