ஐ.தே.க தலைமை அலுவலக வன்செயல்: கஃபே கண்டனம்
Share
Subscribe
இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை அலுவலகத்தின் மீது இன்று திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டதாகக் தாம் கூறு தாக்குதல் குறித்து கஃபே என்ற நீதியானதும், நியாயமானதுமான தேர்தலுக்கான அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
பொது வேட்பாளர் ஒருவர் அறிவிக்கப்பட்ட பின்னர் முக்கிய எதிர்க்கட்சியும் அதன் ஆதரவாளர்களும், செயற்பாட்டாளர்களும் வன்செயல்கள், துன்புறுத்தல்கள், மிரட்டல்கள் போன்றவற்றின் மூலம் இடையூறு செய்யப்படுவதாக அதில் கஃபே குற்றஞ்சாட்டியுள்ளது.
இது குறித்து அந்த அமைப்பின் தேசிய அமைப்பாளர்களில் ஒருவரான அஹமட் மனாஸ் மக்கீன் அவர்களின் செவ்வி.
