டிசம்பர் 24 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (24-12-2014) பிபிசி தமிழோசையில்
இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை அலுவலகத்தின் மீது நடத்தப்பட்டதாக கூறப்படும் தாக்குதல் குறித்து கஃபே அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது குறித்து அந்த அமைப்பின் தேசிய அமைப்பாளர்களில் ஒருவரான அஹமட் மனாஸ் மக்கீனின் செவ்வி;
இலங்கையின் கிழக்கிலும் வடக்கிலும் மோசமடைந்துவரும் வெள்ள நிலைமைகள் நேரடித்தகவல்கள்;
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 60 பேருக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டிருப்பது குறித்த செய்திகள்;
தமிழ்த்திரைப்படத்துறையின் முக்கிய ஆளுமைகளில் ஒருவரான நேற்று மறைந்த பிரபல திரைப்பட இயக்குநர் கே பாலச்சந்தரின் திரையுலக பங்களிப்பு குறித்த செய்திப்பெட்டகம்;
நிறைவாக பலகணியில் சுனாமி ஆழிப்பேரலை தாக்கி பத்தாண்டுகள் ஆனநிலையில் இந்தோனேசியாவின் அச்சே பகுதியின் இன்றைய நிலைமை குறித்த பெட்டகம் ஆகியவற்றைக் கேட்கலாம்.
