டிசம்பர் 28 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Dec 28, 2014, 04:42 PM

Subscribe

இன்றைய (28-12-2014) பிபிசி தமிழோசையில்

162பேருடன் காணாமல் போயிருக்கும் ஏர் ஏசியா விமானத்தை தேடும் பணிகள் குறித்த விரிவான செய்திகள்

இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் ஆளும் கூட்டணியில் இருந்து ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி விலகி எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் மைத்ரிபால சிரிசேனவுக்கு ஆதரவளிப்பது ஏன் என்பது குறித்து ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவ்ப் ஹக்கீம் பிபிசி தமிழோசைக்கு அளித்த பிரத்யேக செவ்வி;

இலங்கையின் கிழக்கே எதிர்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தாக்கப்பட்டதாக வந்திருக்கும் புகார்கள் தொடர்பான தகவல்கள்;

பிரபல தமிழ் எழுத்தாளரும் நாமக்கல்லில் இருக்கும் அரசு கல்லூரியின் தமிழ்ப்பேராசிரியருமான பெருமாள் முருகன் எழுதி நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான மாதொருபாகன் என்கிற நாவல் ஹிந்து மதக்கடவுளையும் இந்து பக்தர்களையும் இழிவு செய்வதால் அந்த புத்தகத்தை தடைசெய்யவேண்டும் என்றும் அதை எழுதிய எழுத்தாளர் பெருமாள் முருகனை கைது செய்து தண்டிக்கவேண்டும் என்றும் கோரும் ஆர் எஸ் எஸ் மற்றும் அதன் துணை அமைப்புக்கள் கோரியுள்ள பின்னணியில் இந்த கோரிக்கை எழுப்பும் ஆர் எஸ் எஸ் அமைப்பின் உறுப்பினர் மஹாலிங்கத்தின் விரிவான செவ்வி;

ஆர் எஸ் எஸ் உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புக்கள் “மாதொருபாகன்” நாவலை எதிர்ப்பது தவறு என்று கூறும் எழுத்தாளரும் பேராசிரியருமான பெருமாள் முருகனின் விரிவான செவ்வி;

சுனாமி ஆழிப்பேரலை தாக்கி பத்தாண்டுகள் ஆன நிலையில் தமிழ்நாட்டில் மோசமாக பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தில் பெற்றோரை இழந்த பிள்ளைகளின் இன்றைய நிலைமைகள் குறித்த பெட்டகம் ஆகியவற்றைக் கேட்கலாம்.