டிசம்பர் 29 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Dec 29, 2014, 04:49 PM

Subscribe

இன்றைய (29-12-2014) பிபிசி தமிழோசையில்

இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் எதிரணி வேட்பாளரை ஆதரித்து வீதிநாடகம் நடத்திய இளம் கலைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறித்த செய்திகள்;

இலங்கையில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் மைத்ரிபால சிறிசேனவின் மூன்று தேர்தல் பிரச்சார அலுவலகங்கள் திங்களன்று அதிகாலை தாக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளது குறித்த செய்திகள்;

இந்த தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தம்மை ஆதரிக்க வேண்டும் என்று எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளர் மைத்ரிபால சிரிசேனா கோரிக்கை விடுத்திருப்பது குறித்த செய்திகள்;

தமிழ்நாட்டின் அரசு பேருந்து போக்குவரத்துத்துறை ஊழியர்கள் ஊதிய உயர்வு தொடர்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்த வேலைநிறுத்தம் இன்று திங்கட்கிழமை இரண்டாவது நாளாக தொடரும் நிலையில் இந்த வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்த எதிர்க்கட்சிகள் சார்பான 11 தொழிற்சங்கங்களில் ஒன்றான திமுகவின் தொழிலாளர் பிரிவான தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பொதுச் செயலாளர் மு ஷண்முகத்தின் பேட்டி;

ஊதிய உயர்வு தொடர்பில் தொழிலாளர்களுடன் அரசாங்கம் பேச வராமல் இருப்பது ஏன் என தற்போதைய வேலைநிறுத்தத்தைப் புறக்கணிக்கும் அரசாங்கத்துக்கு ஆதரவான அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் மாநில பொதுச்செயலாளரும் ஆளும் அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான சின்னசாமியின் பேட்டி;

தனியார் நிலத்தை அரசு கையகப்படுத்துவது சம்பந்தமான சட்டத்தில் திருத்தம் கொண்டுவரும் அவசர சட்டத்திற்கு இன்று நடந்த இந்திய அரசின் அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் அளித்திருப்பதாக மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்திருப்பது குறித்த செய்திகள்;

நிறைவாக விளையாட்டரங்கம் ஆகியவற்றைக் கேட்கலாம்.