டிசம்பர் 31 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (31-12-2014) பிபிசி தமிழோசையில்
தற்போதைய இலங்கை ஜனாதிபதி தேர்தலில், கடந்த தேர்தலைவிட இரண்டு மடங்காக தேர்தல்விதி மீறல் புகார்கள் அதிகரித்துள்ளதாக தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள பெபரல் அமைப்பு தெரிவித்துள்ளது குறித்த செய்திகள்;
கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் நான்கு பேர் கூட்டமைப்பில் இருந்து விலகி அரசாங்கத்தில் இணைந்திருப்பது குறித்த செய்திகள்;
இந்தியாவில் தற்போதிருக்கும் நீதிபதிகளே நீதிபதிகளை நியமித்துக்கொள்ளும் முறைக்கு மாற்றாக தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை அமைக்கும் சட்டத்திற்கு இந்திய குடியரசு தலைவர் இன்று ஒப்புதல் வழங்கியிருப்பது குறித்த செய்தி;
மத்திய அரசின் இந்த முடிவு தேவையா என்பது குறித்து இந்திய உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ ஆர் லட்சுமணனின் செவ்வி;
ஏர் ஏசியா விமான விபத்தில் 162 பேர் பலியான பின்னணியில் மோசமான வானிலை விமான விபத்துக்களை தோற்றுவிக்கிறதா என்பதை ஆராயும் பிபிசியின் செய்திக்குறிப்பு;
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் 1950களில் தென்மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள மரலிங்கா பிரதேசத்தில் ஏழு குண்டுகளை வெடித்து பிரிட்டன் நடத்திய அணுகுண்டு பரிசோதனைகளின் தொடரும் தாக்கங்கள் பற்றிய செய்திக்குறிப்பு;
தற்போதைய இபோலா நோய்த்தொற்று வவ்வால்கள் தங்கியிருந்த மரப்பொந்தில் விளையாடிய சிறுவன் மூலமாக தொற்றியிருக்கலாம் என்று கூறும் புதிய மருத்துவ ஆய்வாளரின் கருத்துக்கள்;
நிறைவாக இன்றைய பலகணியில் கட்டாயத் திருமணங்களை தடுத்து நிறுத்துவதில் ஐக்கிய ராஜ்ஜியம் வெற்றிபெறக் காரணமென்ன என்பதை ஆராயும் பெட்டகம் ஆகியவற்றைக் கேட்கலாம்.
