ஜனவரி 4 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (04-01-2015) பிபிசி தமிழோசையில்
இலங்கை ஜனாதிபதித்தேர்தலை கண்காணிப்பதற்கான சர்வதேச கண்காணிப்பாளர் குழுவினர் இலங்கைக்கு வந்திருப்பது குறித்து இலங்கையின் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம். மொஹமட்டின் பிரத்யேக செவ்வி;
இலங்கை பொலநறுவை மாவட்ட அரலகன்வில நகரின் தேர்தல் வன்முறைகளை கட்டுக்குள் கொண்டுவருவதற்க்கு ராணுவத்தினர் மற்றும் காவல்துறையின் விசேட அதிரடிப்படையினர் அனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்திருப்பது குறித்த செய்திகள்;
இலங்கை ஜனாதிபதித் தேர்தல் குறித்து மலையகப் பிரதேச மக்களின் கருத்துக்களைத்தாங்கி வரும் பெட்டகம்;
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் மஹிந்த ராஜபக்ஷவின் நிகழ்வில் கலந்துகொண்ட இந்தி திரைப்பட நடிகர் சல்மான்கானுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது மும்பை வீட்டிற்கு முன்னர் ஞாயிறன்று நடந்த ஆர்பாட்டம் குறித்த செய்திகள்;
இந்தியாவின் பொது சுகாதரத்துறையின் நிதி ஒதுக்கீட்டில் சுமார் 20 சதவீதத்தை, அதாவது சுமார் 6000 கோடிகளுக்கும் அதிகமாக இந்திய நடுவணரசு இந்த ஆண்டு குறைத்திருப்பது குறித்து இந்திய பொதுசுகாதார சங்கத்தின் தமிழக பிரிவின் தலைவர் மருத்துவர் எஸ் இளங்கோவின் செவ்வி ஆகியவற்றைக் கேட்கலாம்.
