ஜனவரி 7 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (07-01-2014) பிபிசி தமிழோசையில்
பிரான்சின் நகைச்சுவை மற்றும் பகடி இதழான "ஷார்லி எப்தோ"வின் அலுவலகங்கள் மீது முகமூடி அணிந்த துப்பாக்கிதாரிகள் நடத்திய குண்டுத்தாக்குதலில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டிருப்பது குறித்த செய்தி;
இலங்கை ஜனாதிபதித் தேர்தல் நாளை வியாழக்கிழமை நடக்கவிருக்கும் நிலையில் தேர்தல் வன்முறையில் காயமடைந்த ஒருவர் உயிரிழந்திருக்க்கும் பின்னணியில் தேர்தலுக்கான தயாரிப்புகள் பற்றிய செய்திகள்;
நாளை நடக்கவிருக்கும் தேர்தலில் வாக்களிக்க ஆர்வமாயிருக்கும் வடகிழக்குப்பகுதி மக்களின் கருத்துக்கள்;
இந்தியாவில் இருக்கும் இலங்கை அகதிகள் இந்த தேர்தலில் வாக்களிக்க முடியாத நிலைமை குறித்த செவ்வி ஆகியவற்றைக் கேட்கலாம்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொள்ளும் தொலைக்காட்சி ஒளிபரப்பக்கூடாதென நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது குறித்த செய்தி;
இந்தியாவின் முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் மனைவி சுனந்தா புஷ்கரின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணைகள் முறையாக நடக்கவில்லை என சசிதரூர் குற்றம் சுமத்தியிருப்பது குறித்த செய்தி;
எதிர்வரும் பிப்ரவரி தொடங்கி மார்ச் மாத இறுதிவரை, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியைத் தேர்வுக் குழுவினர் அறிவித்துள்ள நிலையில் இந்த அணி குறித்த ஒரு ஆய்வுக்கண்ணோட்டம் ஆகியவற்றைக் கேட்கலாம்.
