'மலையக மக்களின் அரசியல் அறிவுக்கு மதிப்பளிக்கிறோம்': இதொகா
Share
Subscribe
மலையக மக்கள் அரசியல் அறிவுடன் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்திருப்பதாகவும் அதற்கு தாம் மதிப்பளிப்பதாகவும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
நாட்டின் ஏனைய மக்களுடன் இணைந்து, சுதந்திரமாக சிந்தித்து மலையக மக்கள் வாக்களித்துள்ளதாகவும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் மகிந்த அரசாங்கத்தின் துணைப் பொருளாதார அமைச்சருமான முத்து சிவலிங்கம் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
அடுத்த கட்டமாக, மலையகத்தில் தங்களின் தொழிற்சங்கத்தை மேலும் பலப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்கப் போவதாகவும் முத்து சிவலிங்கம் கூறினார்.
