“புலம்பெயர் தமிழரின் போர்க்குற்ற முன்னெடுப்புக்கு பின்னடைவு”
Jan 11, 2015, 05:02 PM
Share
Subscribe
இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோற்று, மைத்ரிபால சிரிசேன வெற்றி பெற்றிருப்பது புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர் அமைப்புக்கள் இதுவரை முன்னெடுத்த போர்க்குற்ற விசாரணைக்கான முயற்சிகளுக்கு பெரும் பின்னடைவாக அமையகூடும் என்கிற அச்சம் சில மட்டங்களில் எழுந்துள்ளதாக கூறுகிறார் ஈழத்தமிழ் அரசியல் திறனாய்வாளர் நிராஜ் டேவிட்.
