ஜனவரி 11 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Jan 11, 2015, 06:14 PM

Subscribe

இன்றைய (11-01-2014) பிபிசி தமிழோசையில்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் ஏற்பட்டிருக்கும் பிளவு குறித்து சுடரொளி பத்திரிகையின் ஆசிரியர் அருண் ஆரோக்கியநாதனின் செவ்வி;

இலங்கை தலைமை நீதியரசர் மொஹான் பீரிஸை நீக்க வேண்டும் என்று இலங்கை வழக்கறிஞர்கள் சங்கம் கோரிக்கை விடுத்திருப்பது குறித்து வழக்கறிஞர் கே.எஸ். ரட்னவேலின் செவ்வி;

இலங்கையின் ஜனாதிபதித்தேர்தலில் வென்ற புதிய ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேனா இன்று நாட்டுக்கு ஆற்றிய உரை குறித்து தினக்குரல் பத்திரிகையின் ஆசிரியர் வீ. தனபாலசிங்கத்தின் ஆய்வுக்கண்ணோட்டம்;

மைத்ரிபால சிரிசேனா அமைக்கவிரும்பும் தேசிய அரசில் தமிழ்தேசிய கூட்டமைப்பு பங்கேற்குமா என்பது குறித்து இரா சம்பந்தரின் செவ்வி;

இலங்கை அரசில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பங்கேற்கவேண்டுமா வேண்டாமா என்பது குறித்து இலங்கையின் வடகிழக்குத் தமிழ்மக்களின் கருத்துக்கள்;

இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த தோற்று மைத்ரிபால வென்றிருப்பதை இந்தியா எப்படி பார்க்கிறது என்பது குறித்து டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் சஹாதேவனின் ஆய்வு;

இலங்கை ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை புலம்பெயர்ந்துவாழும் ஈழத்தமிழர்கள் எப்படிப்பார்க்கிறார்கள் என்பது குறித்து புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர் அரசியல் திறனாய்வாளர் நிராஜ் டேவிட்டின் ஆய்வுக்கண்ணோட்டம்;

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்துள்ள ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட அறிவுஜீவிகள் மீண்டும் இலங்கை திரும்பவேண்டும் என்று புதியஜனாதிபதி விடுத்திருக்கும் வேண்டுகோளை எப்படி பார்க்கிறீர்கள் என்று புலம்பெயர்ந்து வாழும் பத்திரிக்கையாளர் நடராஜா குருபரனின் செவ்வி ஆகியவற்றை கேட்கலாம்.