"எழுத்தாளன் என்பவன் புனிதப்பசு அல்ல, உண்மையே புனிதப்பசு" -அரவிந்தன் நீலகண்டன்

Jan 14, 2015, 05:24 PM

Subscribe

பெருமாள் முருகன் எழுதிய நாவலான, மாதொருபாகன் பற்றி இந்துத்துவ மற்றும் சாதி அமைப்புகளிடம் இருந்து எழுந்த எதிர்ப்பு குறித்து இந்துத்துவ சிந்தனையாளர் அரவிந்தன் நீலகண்டன் பிபிசி தமிழோசையிடம் கருத்து வெளியிடுகையில், இந்தப் புதினம் ஒரு வரலாற்று ஆய்வாக முன்னுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில், இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்கள் உண்மையானவை என்று நிருபிக்க வேண்டிய கடப்பாடு பெருமாள் முருகனுக்கு இருக்கிறது. ஆனால் அதற்காக புத்தகத்தை எரிப்பது போன்ற வன்செயல்களில் தனக்கு உடன்பாடு இல்லை என்கிறார். கருத்து சுதந்திரம் என்பது முழுமையான ஒன்றாக இருக்க, எந்தவிதக் கட்டுப்பாடுகளும் இல்லாததாகவே இருக்கவேண்டும், ஆனால் எழுத்தாளன் புனிதப்பசு அல்ல. கருத்து சுதந்திரமும், உண்மையுமே புனிதப்பசுவாக இருக்கவேண்டும் என்றார் அவர்.