நாடுகடந்த தமிழ் ஊடகவியலாளர்கள் இலங்கை திரும்ப தயங்குவது ஏன்?

Jan 16, 2015, 05:13 PM

Subscribe

கடந்த காலங்களில் நாட்டை விட்டு வெளியேறிய ஊடகவியலாளர்கள் இலங்கை திரும்ப வேண்டும் என்று புதிய அரசாங்கம் அழைப்பு விடுத்திருக்கின்றது.

இந்த அழைப்பை ஏற்று நாடுதிரும்பத் தீர்மானித்துள்ளதாக மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்த நாடுகடந்து வாழும் ஊடகவியலாளர் சுனந்த தேஷப்பிரிய கூறியுள்ளார்.

எனினும் கடந்த காலங்களில இலங்கையிலிருந்து வெளியேறிய தமிழ் ஊடகவியலாளர்கள் நாடு திரும்புவதில் தயக்கம் காட்டுகின்றனர்.

இந்த தயக்கத்துக்கான காரணங்கள் பற்றி இலங்கையில் வௌியான சரிநிகர் சஞ்சிகையின் ஆசிரியரும் சுதந்திர ஊடக இயக்கத்தின் பேச்சாளர்களில் ஒருவருமான நாடுகடந்து வாழும் தமிழ் ஊடகவியலாளர் சிவகுமார் பிபிசி தமிழோசையின் ஜெயப்பிரகாஷ் நல்லுசாமியிடம் விபரித்தார்.