ஜனவரி 18 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (18-01-2015) பிபிசி தமிழோசையில்
விடுதலைப்புலிகளின் முன்னாள் பொறுப்பாளர்களில் ஒருவரான குமரன் பத்மநாதனுக்கு, தொடர்ந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கோரியிருப்பதை எதிர்ப்பது ஏன் என்பது குறித்து, ஜேவிபி எனப்படும் மக்கள் விடுதலை முன்னணியின் செயற்குழு உறுப்பினர் ராமலிங்கம் சந்திரசேகரனின் செவ்வி;
இலங்கை கிழக்கு மாகாண சபையில் இடம் பெறவிருக்கும் ஆட்சிமாற்றத்தில் முதலமைச்சர் பதவியில் விட்டுக்கொடுப்புக்கு இடமளிக்க வேண்டாம் என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்கள் கட்சித் தலைமையை வலியுறுத்தியிருப்பது குறித்த செய்திகள்;
இந்தியா வந்திருக்கும் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்துப் பேசியிருப்பது குறித்த செய்திகள்;
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரின் இரண்டாவது ஒருநாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணி வீரர் வேகமான சதத்தைக் குவித்து சாதனை படைத்துள்ளது தொடர்பான தகவல்கள்;
நிறைவாக வேர்களை வெறுக்கும் விழுதுகள் தொடரின் எட்டாவது பகுதி ஆகியவற்றை கேட்கலாம்.
