ஜனவரி 19 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (19-01-2015) பிபிசி தமிழோசையில்
ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு பதவியிழந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி சந்தித்தது பற்றி தமிழ்நாட்டில் எழுந்துள்ள விமர்சனங்கள் குறித்து பாஜகவின் கருத்துக்கள்;
தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சையை தோற்றுவித்திருக்கும் மாதொருபாகன் நாவலை எழுதிய பெருமாள் முருகனிடம் சமாதானம் செய்த தமிழக அரசு அதிகாரிகள் எழுதி வாங்கிய ஒப்பந்தம் சட்டவிரோதமானது என்று வழக்கு தொடுத்திருக்கும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயலாளர் தமிழ்ச்செல்வனின் பிரத்யேக செவ்வி;
இலங்கையில் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் உட்கட்டமைப்பு கட்டுமானங்களுக்காக சீனாவுடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தங்கள் தொடர்பாக ஆய்வு நடத்தவுள்ளதாக புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், இலங்கையுடனான உறவை தொடர்ந்தும் முன்னெடுக்க விரும்புவதாக சீனா தெரிவித்துள்ளது தொடர்பான விபரங்கள்;
கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு விட்டுக்கொடுக்க தான் தயார் என தற்போதைய முதலமைச்சர் அறிவித்திருப்பது குறித்த செய்திகள்
விளையாட்டரங்கம் ஆகியவற்றை கேட்கலாம்.
